ஒரு கல்லுாரியின் கதை, மாத்தி யோசி, அழகன் – அழகி உள்ளிட்ட படங்களை இயக்கி, பரவலான வரவேற்பை பெற்றவர், நந்தா பெரியசாமி. போராடி வெற்றி பெற்ற, ஒரு பெண்ணின் உண்மைக் கதையை படமாக்க நினைத்து, நயன்தாராவை அணுகினார். அவருக்கும் கதை பிடித்துப் போகவே, நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால், மாதக்கணக்கில் நந்தா பெரியசாமி காத்திருந்தது தான் மிச்சம். தற்போது, அதே கதையை, பாலிவுட்டின் பிரபல இயக்குனர், ஆர்காஷ் கருணா தயாரிப்பில், டாப்சியை வைத்து உருவாக்கும் பணியில் இறங்கி விட்டார், நந்தா பெரியசாமி.
இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட நயன்தாரா, படம் குறித்து பேச அழைத்தார். நந்தா பெரியசாமியோ, டாப்சியை வைத்து, படம் எடுக்க இருப்பதை கூறி, அவர் அழைப்பை நிராகரித்து விட்டார்.

