தெலுங்கிலிருந்து தமிழுக்கு படங்கள் டப்பிங் ஆகி வெளியாவதும், தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆகி வெளியாவதும் வழக்கமானவைதான். ஆனால், சமீப காலங்களில் இரு மொழிகளிலும் அந்த டப்பிங் படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனையைக் குவிக்கவில்லை.
‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு கடந்த ஒன்றரை வருடங்களாக தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் படங்கள் வெற்றி பெறவில்லை. அந்த விதத்தில் பிரம்மாண்டமான படமாக வெளிவந்த ‘சாஹோ’ படம் தெலுங்கிலேயே தோல்வியுள்ள நிலையில் தமிழில் படுதோல்வி அடைந்து வசூலில் கடுமையாக சறுக்கியது.
அடுத்து தெலுங்கிலிருந்து தமிழுக்கு வர உள்ள பிரம்மாண்டமான படமாக ‘சைரா’ அக்டோபர் 2ம் தேதி வர உள்ளது. சிரஞ்சீவி நடித்து தமிழில் டப்பிங் செய்யப்படும் படங்கள் 80களிலிருந்தே சுமாரான வசூலையும் சில படங்கள் நல்ல வசூலையும் பெற்றுள்ளன.
‘சாஹோ’ படம் சறுக்கலை ஏற்படுத்திய நிலையில், சுதந்திரப் போராட்டக் கதைப் படமான ‘சைரா’ வசூலில் சீறுமா என்பதற்கு இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

