பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் கவின். முதலில் அபிராமி, அடுத்து சாக்ஷி, தற்போது லாஸ்லியா என அவர் காதலை வைத்து விளையாடி மற்றவர்களை வெளியேற்ற அதைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், லாஸ்லியாவிடம் மட்டும் கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்கிறார்.
இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் பைனலுக்கு முன்பாக 5 லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு போட்டியை விட்டு விலகலாம் என பிக்பாஸ் ஒரு சலுகை கொடுப்பார். கடந்த இரண்டு சீசனிலும் யாரும் அப்படி செய்யவில்லை. ஆனால், இந்த சீசனில் கவின் அப்படி செய்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அது தொடர்பான புரொமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அது உண்மையா, பொய்யா என்பது இன்றைய நிகழ்ச்சியைப் பார்த்த பிறகே தெரிய வரும்.

