நடிகை சுஜா வருணிக்கு கடந்த 21ல் ஆண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை கணவர் சிவக்குமார் வெளியிட்டார். என் மகன் சிம்பா வருகை எனவும் அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை சுஜா வருணி, கணவர், பிரசவம் பார்த்த மருத்துவர் கனிமொழி, குழந்தையுடன் தானும் இருக்கும் படத்தை வெளியிட்டு, மருத்துவர் கனிமொழியை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், ‛‛உண்மையிலேயே நானும், எனது குழந்தையும் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். அதனால்தான், எனக்கு மருத்துவர் கனிமொழி பிரசவம் பார்த்திருக்கிறார். அவரது கையாலேயே, இந்த உலகிற்குள் வந்திருக்கும் என் குழந்தை, இந்த உலகத்தைப் பார்ப்பது கனிமொழியால்தான். அவருக்கு எங்கள் நன்றி. என்னை மருத்துவராக மட்டுமல்லாமல், ஒரு தாயாகவும் பார்த்துக் கொண்ட கனிமொழிக்கு என்னுடைய நன்றி. நிஜமாலுமே நான் ஒரு பாக்கியசாலிதான்” என பதிவிட்டுள்ளார்.