சமூக வலைத்தளங்களில் சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பகிர்வதில் டுவிட்டர் தளம் முன்னணி வகிக்கிறது. பல சினிமா பிரபலங்கள் அதில் தான் முழு செயல்பாட்டுடன் இருக்கிறார்கள். அதிலும் அஜித் படம் வெளிவந்தால் பல சினிமா பிரபலங்களே அதைப் பற்றி பகிர்வது நடப்பது வழக்கம்.
டுவிட்டரில் இந்த 2019ம் ஆண்டின் முதல் பாதியில் ‘விஸ்வாசம்’ படம் அதிகமான ஹேஷ்டேக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ‘லோக்சபா எலெக்ஷன்ஸ் 2019’ம், மூன்றாவது இடத்தில் ‘கிரிக்கெட் வேர்ல்டு கப் 2019’ம் இடம் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
நான்காவது இடத்தில் ‘மகரிஷி’, ஐந்தாவது இடத்தில் ‘நியூபுரொபைல்பிக்’ ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.
இதை அஜித் ரசிகர்கள் அதிகமாக நேற்றும் டிரென்ட் செய்தனர். பதிலுக்கு விஜய் ரசிகர்கள் ‘பிகில்’ வரும் வரை காத்திருங்கள் எனத் தெரிவித்துள்ளனர்.