சின்னத்திரை பிரபலங்கள் அடுத்தடுத்து பெரிய திரைக்கு படை எடுத்து வருகின்றனர். அவற்றில் சந்தானம், சிவகார்த்திகேயனைப்போல் ஒரு சிலருக்கு சினிமாவில் பெரிய வாழ்க்கை கிடைத்து விடுகிறது. ம.க.பா. ஆனந்த் போல் பலருக்கு சினிமாவில் பிரேக் கிடைக்காமல் போய்விடுகிறது.
கடந்த வாரம் வெளியான நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் ஹீரோ கவின், சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தவர்தான். நட்புன்னா என்னானு தெரியுமா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் கவின் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து மற்றொரு சின்னத்திரை பிரபலம் பெரியதிரைக்கு வருகிறார். அவர்…. விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ்.
கனா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் இவர். இந்த படத்தில் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு U சான்று வழங்கியுள்ளனர் தணிக்கைக்குழுவினர். இதனை தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் வெற்றியில்தான் ரியோ ராஜின் எதிர்காலமே இருக்கிறது.