வினோத் இயக்கத்தில், ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். மீண்டும் வினோத் இயக்கத்தில்தான் அஜித் நடிக்கப் போகிறார் என்று உறுதியான தகவல்களும் வெளிவந்துள்ளன.
அந்த புதிய படத்திற்காக வினோத் அஜித்திடம் இரண்டு கதைகளைச் சொன்னாராம். அதில் ஒரு கதை அரசியல் கதை, மற்றொரு கதை சமூகப் பிரச்சினை கொண்ட கதையாம். அரசியல் கதையை வேண்டாமென்ற அஜித், சமூகப் பிரச்சினை பற்றிய கதையைப் படமாகப் பண்ணலாம் என்று சொன்னாராம். அந்தப் பிரச்னைக்கு படம் ஒரு தீர்வையும் சொல்லும் விதமாகத்தான் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். அதுவே அஜித்தைக் கவர்ந்த அம்சம் என்கிறார்கள். கதையை மேலும் மெருகூட்டும் வேலைகள் நடந்து வருகிறதாம்.
‘நேர் கொண்ட பார்வை’ படம் ஆகஸ்ட் 10 வெளியான பிறகு, செப்டம்பர் மாதம் இந்தப் புதிய படத்தை ஆரம்பித்து அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.