கங்காரு, வந்தாமல, ஸ்கெட்ச், மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீ பிரியங்கா. இவர் தற்போது நடித்து வரும் படம் கங்கணம். ஆனைவாரி ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கெளசிக் நாயகனாக நடிக்கிறார்.
காதல் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அவுட்டோரில் நடைபெற்றபோது, வேகமாக பைக்கில் செல்லும் ஒரு காட்சியில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. அப்போது அவருக்கு முன்பு கேமராவுடன் சென்று கொண்டிருந்த வாகனத்தை திடீரென்று நிறுத்தி விட்டார்களாம். இதை எதிர்பார்க்காத ஸ்ரீபிரியங்கா பேரதிர்ச்சியாகி விட்டாராம்.
அப்போது முன்னே சென்ற வாகனத்தில் வேகமாக மோதி கீழே விழ இருந்த அவரை படக்குழு பாய்ந்து சென்று பிடித்து நிறுத்தி விபத்து நேராமல் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த அதிர்ச்சி சம்பவத்தினால் பதறிப்போன ஸ்ரீபிரியங்காவிற்கு அந்த பயத்திலேயே காய்ச்சல் வந்து விட்டதாம்.