Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்

April 18, 2019
in Cinema
0

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம், இன்று(ஏப்.,17) வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதுமாக சேர்த்து, எட்டு நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்த இந்த படத்தை, நடிகர் பிரித்விராஜ் ஒரு அக்மார்க் கமர்சியல் படமாக இயக்கி, மோகன்லால் ரசிகர்களை பரவசப்படுத்தினார்

இந்தப்படம் வெளியாவதற்கு முன்பு தொடர்ந்து தினசரி ஒரு போஸ்டராக இந்தப்படத்தில் இடம்பெற்ற 26 விதமான கேரக்டர் போஸ்டர்களை வெளியிட்டு வந்தார் பிரித்விராஜ். அதில் இறுதியாக ஒரு போஸ்டரை மட்டும் வெளியிடாமலேயே நிறுத்தி வைத்திருந்த பிரித்விராஜ், தற்போது மோகன்லால் இடம்பெற்றுள்ள அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இதை முதலிலேயே வெளியிட்டிருந்தால் படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸ் வெளிப்பட்டு விடும் என்பதாலேயே இத்தனை நாட்களாக இதை வெளியிடாமல் வைத்திருந்தார் பிருத்விராஜ். படத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற கதாபாத்திரத்தில் தான் படம் முழுக்க உலா வருவார் நடிகர் மோகன்லால். ஆனால் படத்தின் இறுதியில்தான் அவர் ஒரு இன்டர்நேஷனல் டான் என்பது தெரியவரும்.. அந்த கேரக்டரில் பெயருடன்தான் கூடிய இந்த புதிய போஸ்டரைத்தான் தற்போது வெளியிட்டுள்ளார் பிரித்விராஜ்.

Previous Post

பிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி

Next Post

தமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’

Next Post

தமிழ் சினிமாவின் 2வது 'பார்ட் 3' படம் 'காஞ்சனா 3'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures