Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் மகத் திருமணம் : இந்திய அழகி பிரச்சி மிஸ்ராவை மணக்கிறார்

April 18, 2019
in Cinema
0

நடிகர் மகத் அதிக படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் சினிமாவின் யூத் ஏரியாவில் மகத் பிரபலம். சிம்புவின் பள்ளித் தோழர், வெங்கட்பிரபு வட்டாரத்துக்கு நெருங்கிய நண்பர். சிம்பு நடித்த வல்லவன், காளை படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தவர். மங்காத்தாவில் பெரிய கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு பிரியாணி, வடகறி, சென்னை 28 இரண்டாம் பாகம், அன்பானவன் அடங்காதன் அசராதவன் படங்களில் நடித்தார். தற்போது வந்தா ராஜாவாத்தான் வருவேன், யாகன், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவண்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அதில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் உடன் காதல் வரை சென்றார், ஆனால் அவருக்கு ஓகே., சொல்லவில்லை. கடைசியாக மகத் காதலித்தது 2012ம் ஆண்டு மிஸ் இண்டியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ராவை. துபாயில் நடந்த ஒரு விழாவில் சந்தித்துக் கொண்ட இவர்கள் நண்பர்களாகி பின்பு காதலர்களாகி விட்டார்கள். இருவரும் தாங்கள் சேர்ந்து எடுத்த படங்களை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு காதலை வெளிப்படுத்தினார்கள்,
இந்த நிலையில் நேற்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்தாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். திருமண தேதி அறிவிக்கப்படவில்லை. நிச்சயதார்த்த படங்களை இருவரும் தங்களது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளனர்.

Previous Post

சினிமா பைனான்சியர் போத்ரா மரணம்

Next Post

பிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி

Next Post

பிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures