2007ல் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் முனி. வேதிகா, ராஜ்கிரண், கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில், 12 ஆண்டுகள் கழித்து தற்போது உருவாகியுள்ள முனி படத்தின் நான்காம் பாகமான காஞ்சனா 3 படத்திலும், முனியில் நடித்த அதே வேதிகா மீண்டும் நாயகியாக நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், முனி படத்தில் நடித்தபோது எனக்கு 16 வயது. அப்போது சினிமாவைப்பற்றியோ, நடிப்பைப்பற்றியோ பெரிதாக எதுவும் தெரியாது. ஆனபோதும் என் நடிப்பு அப்போது பேசப்பட்டது.
12 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் காஞ்சனா 3யில் நடித்துள்ளேன். எனது நடிப்புத்திறமையை அறிந்த லாரன்ஸ், முதல் படத்தை விடவும் இந்த படத்தில் அழுத்தமான வேடம் கொடுத்துள்ளார். அதனால், முனி படத்தைக்காட்டிலும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறேன். காஞ்சனா 3 வேதிகாவை பெரிய அளவில் பேச வைக்கும் படமாக இருக்கும் என்கிறார் வேதிகா.

