Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தன் தாய்மை பற்றி ‘அப்டேட்’ தரும் எமி ஜாக்சன்

April 13, 2019
in Cinema
0

தமிழில் சினிமாவில் ‘மதராசப்பட்டிணம்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆங்கிலேய நடிகை எமி ஜாக்சன். அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சில மொழிகளில் நாயகியாக நடித்தார். அவருக்கும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிசினஸ்மேன் ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ள நிலையில் எமி ஜாக்சன் கர்ப்பமானார். அது பற்றிய தகவலை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அதோடு, தன் தாய்மை பற்றிய ‘அப்டேட்’ தகவல்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்காலக் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் அவருடைய கர்ப்பமான வயிறு தெரியும் அளவிற்கு, அதில் இருவரும் கை வைத்துக் கொண்டு இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படத்தை, ‘வயிறு பெரிதாவது ஆரம்பமாகிவிட்டது’ என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். கர்ப்பத்துடன் அவர் உடற்பயிற்சி செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். கவனமாக இருங்கள் எனவும் பலர் ஆலோசனை சொல்லியிருந்தனர்.

சினிமாவில் நடிக்கும் போது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த எமி தற்போது கர்ப்பமான நிலையிலும் புகைப்படங்களை வெளியிடுவது ஆச்சரியமாக உள்ளதாக சிலர் குறிப்பிட்டுள்ளார்கள்.

Previous Post

‘வெல்டன்’ யோகிபாபு

Next Post

சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று

Next Post

சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures