அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63வது படத்தின் படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வந்த நிலையில், அங்கிருந்து இடம் பெயர்ந்து காசிமேடு துறைமுகம் பகுதியில் சில தினங்களாக நடைபெற்றது. ஆனால், வடசென்னையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அந்த பகுதிக்கு படையெடுக்கத் தொடங்கினர்.
அப்படி சென்றவர்கள் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் சூழ்ந்து கொண்டதோடு, தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டதால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் விஜய்யை காண ஆவலுடன் வந்த ரசிகர்கள் வெறுப்புடன் அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் விஜய் கொஞ்சம் அப்செட்டாக உள்ளாராம்.
அதனால், படப்பிடிப்பை காசிமேட்டில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றிவிடலாம் என்று விஜய் சொன்னதை அடுத்து, படப்பிடிப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.