அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63வது படம், கால்பந்தாட்ட கதையில் உருவாகி வருகிறது. விளையாட்டுத்துறையில் அரசியல் புகுந்து என்னென்ன சீர்கேடுகள் நடக்கிறது என்பதை இந்த படம் வெளிச்சம் போடுகிறது.
இந்த படத்தில் விஜய் உடன் பரியேறும் பெருமாள் கதிர் நடிக்கிறார். இவரும் விஜய்யைப்போலவே கோட்சாக நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இப்படத்தில் ஒருமுக்கிய வேடத்தில் நடிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
தற்போது மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் என்பவரும் விஜய் 63வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன்பு தமிழில் ஜெய் நடித்த ஜருகண்டி படத்தில் நாயகியாக நடித்துள்ள இவர், மேலும் இரண்டு தமிழ்ப்படங்களிலும் நடித்து வருகிறார்.