தெலுங்கு அர்ஜூன்ரெட்டி படத்தை தமிழில் விக்ரமின் மகன் துருவ்விக்ரம் நடிப்பில் டைரக்டர் பாலா வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படத்தை தயாரித்த இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு போதிய திருப்தி இல்லாததால், அப்படத்தை கிடப்பில் போட்டு விட்டு தற்போது ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும், அர்ஜூன் ரெட்டியை தமிழில் ரீமேக் செய்கிறார்கள்.
இந்த படத்தில் துருவ் விக்ரம், பணிதா சந்து, பிரியா ஆனந்த் உள்பட பலர் நடிக்க, ரதன் இசையமைக்கிறார். கிரீஷய்யா இயக்கும் இந்த படத்தில் இப்போது இயக்குநர் கவுதம் மேனனும் இணைந்துள்ளார். இவர் துருவ் விக்ரமின் தந்தை வேடத்தில் நடிக்கிறார். அர்ஜூன் ரெட்டி படத்தில் இந்த வேடத்தில் மகேஷ்பாபுவின் உறவினர் சஞ்சய் ஸ்வரூப் என்பவர் விஜய் தேவரகொண்டாவின் தந்தையாக நடித்திருந்தார்.