கனா படத்தை அடுத்து, எஸ்.கே.புரொடக் சன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இரண்டாவது படத்தை, கார்த்திக் வேணுகோபால் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருக்கிறார். ரியோராஜ், கலையரசன், நாஞ்சில் சம்பத், விக்னேஷ்காந்த் என பல நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு கேட்சிங்கான தலைப்பு வைக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் சொல்ல, படக்குழு பல தலைப்புகளை சொல்லி வந்தனர். எம்ஜிஆர் நடித்த, என் அண்ணன் படத்தில் இடம்பெற்ற நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா பாடல் வரியையே தலைப்பாக வைக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இப்போது அதுவே உறுதியாகிவிட்டது. படத்திற்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.