நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பிறகு பல படங்களில் நடித்தார். தற்போது வாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் அடிக்கடி மலையேற்றம், சுற்றுலா என ஊர்சுற்றி வருகிறார். அப்போது எடுக்கப்படும் படங்களை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது தொகுப்பாளினி மற்றும் நடிகை ரம்யாவும் இந்த பாணியை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
டிவிக்களில் நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்த ரம்யா. திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலம் ஆனார். எல்லா நடிகர், நடிகைகளுக்கும் நன்கு அறிமுகமான ரம்யா பிரச்சினைகளில் இருந்து விலகியே இருப்பார். கிசுகிசுக்களில் சிக்க மாட்டார். பல இயக்குனர்கள் வற்புறுத்தியும் சினிமாவில் நடிக்க மறுத்து வந்தார். திருமணம் செய்து கொண்ட ரம்யாவுக்கு, அந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை. கணவனை விவாகரத்து செய்து விட்டார். அதோடு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
வெயிட் லிப்டிங்கில் ஆர்வம் காட்டும் ரம்யா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுள்ளார். இந்த நிலையில் மேகாலயாவுக்கு சுற்றுலா சென்றுள்ள ரம்யா, அங்குள்ள நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகில் நீச்சல் உடையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் படத்தை, தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார். இதுபோன்ற உடைகளில் ரம்யா காட்சியளிப்பது இதுவே முதல்முறை.