தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மகளிர் தினம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வரலட்சுமியிடம் அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு பதிலளித்த வரலட்சுமி, அரசியலை நன்கு கற்றுக் கொண்டு இருக்கிறேன். கற்று கொண்ட பிறகு சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன். நமக்கு நாமே என பெண்கள் பாதுகாப்பும், தற்காப்பும் கற்றுக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். அரசியல் என்பது கெட்ட வார்த்தை அல்ல. தற்போதுள்ள சூழலில் ஒருவிரல் புரட்சி தேவை. எனது அப்பா சரத்குமாரின் அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.