Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

போஸ்டரையே காப்பியடித்த ‘பிரேக்கிங் நியூஸ்’

February 22, 2019
in Cinema
0

திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு வந்ததால் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கான வரி விலக்கு நீங்கிப் போனது. அதனால், பலரும் ஆங்கிலப் பெயர்கள், வேற்று மொழிப் பெயர்கள் என தங்களது படங்களுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். வழக்கம் போல தங்களுக்கு தமிழ்ப் பற்று குறைவுதான் என சில இயக்குனர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

சர்வதேச தாய் மொழி தினமான இன்று(பிப்., 21) ஒரு தமிழ்ப் படத்தின் விளம்பரம் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு செய்தி வரவேண்டும், அதன் மூலம் படம் பற்றி விளம்பரம் கிடைக்கும் என்ற ரீதியில்தான் சிலர் வேண்டுமென்றே அப்படி செய்துவருதாக திரையுலகிலேயே சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஜெய் நடிக்க இன்று(பிப்., 21) ஆரம்பமான ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற படத்தின் விளம்பரம், முழுவதும் ஆங்கிலத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. அதோடு படத்தின் தலைப்பும் ஆங்கிலத்தில் தான் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக வெளியிடப்பட்ட போஸ்டர், 2011ல் வெளிவந்த இந்தோனேசியன் படமான ‘தி ரெய்ட் ரிடம்ப்ஷன்’ என்ற படத்திலிருந்து அப்படியே காப்பியடித்திருக்கிறார்கள். போஸ்டர் மட்டும்தான் காப்பியா அல்லது கதையும் காப்பிதானா என்பது படம் வந்தால்தான் தெரியும்.

Previous Post

சூப்பர் டீலக்ஸை எதிர்பார்க்கும் சமந்தா

Next Post

கிளிநொச்சியில் 26 வயதான இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

Next Post

கிளிநொச்சியில் 26 வயதான இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures