செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே அந்த டீசரை யாரோ ‘லீக்’ செய்தனர்.
இப்போது யு டியுபில் 80 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள டீசரில், அதன் பார்வைகளும், லைக்குகளும் திடீரென மாயமாவதாக சூர்யா ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். பொதுவாக, ஒரு வீடியோ வெளியிடப்படும் போது அடுத்த சில மணி நேரங்களுக்கு அதன் பார்வைகளும், லைக்குகளும் சரியாக அப்டேட் ஆகாது. பின்னர்தான் ஆகும். ஆனால், ‘என்ஜிகே’ டீசர் வெளிவந்து இத்தனை நாட்கள் ஆன பிறகும் அதன் அதிகாரப்பூர்வ பார்வைகள், லைக்குகளில் ‘ஹேக்கர்கள்’ விளையாடுவதாக சூர்யா ரசிகர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
அஜித், விஜய் படங்கள் வரும் போதுதான் இது மாதிரியான சண்டைகள் இருக்கும். ஆனால், ஒரு டீசரின் பார்வைகள், லைக்குகளிலேயே சிலர் விளையாடுவது இதுவே முதல் முறை. இது தொழில்நுட்பக் கோளாறா அல்லது வேறு ஏதாவது கோளாறா என்பதை டீசரை வெளியிட்டுள்ள இசை நிறுவனமும், தயாரிப்பு நிறுவனமும்தான் விளக்க வேண்டும்.

