சோயா அக்தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், ஆலியா பட் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‘கல்லி பாய்’ திரைப்படம் கடந்த வாரம் பிப்ரவரி 14ம் தேதி வெளியானது.
மும்பையின் குடிசைப் பகுதியிலிருந்து ஒரு ‘ராப் ஸ்டார்’ உருவாவது தான் இந்தப் படத்தின் கதை. ராப் பாடகர்கள் டிவைன் மற்றும் நேசி ஆகியோரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று 100 கோடி வசூலை நோக்கி இந்தப் படம் போய்க் கொண்டிருக்கிறது. இப்படத்தின் சர்வதேச பிரிமீயர் காட்சி பெர்லினில் நடைபெற்றது. இப்போது ஹாலிவுட் ஸ்டாரும், ராப் பாடகருமான வில் ஸ்மித் படத்தைப் பாராட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், “யோ ரன்வீர், வாழ்த்துகள். கல்லி பாய் படத்தில் நீங்கள் செய்திருப்பதை நான் மிகவும் ரசிக்கிறேன். ஹிப்ஹாப் பாடலை உலகம் முழுவதும் கேட்கிறேன்,” என்று பாராட்டியுள்ளார்.
அதற்கு ரன்வீர் சிங், “ஒரிஜனல் ராப்பர், நடிகரிடமிருந்து கிடைத்த பாராட்டுக்கள், மிகப் பெரியது வில்லி, மரியாதையானது,” என நன்றி தெரிவித்துள்ளார்.