Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கவுதம் மேனனை மாற்றிய பைனான்சியர்கள்

February 18, 2019
in Cinema
0

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் எல்லாமே குறித்த நேரத்தில் வெளியாகாமல் வருடக்கணக்கில் முடங்கிக்கிடப்பது தொடர்கதையாகிவிட்டது. தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிக்குமார், ராணா ஆகியோர் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் இதற்கு விதிவில்க்கில்லை.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வருடக்கணக்காகிவிட்டது. பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று அதை மக்கள் ஏறக்குறைய மறந்தேவிட்ட நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு உட்பட பல பணிகள் முடங்கிக் கிடந்தன.

இப்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து தணிக்கைக்கும் சென்றுவிட்டது. தணிக்கைக் குழுவினர் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு U/A சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். அதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

வருடக்கணக்கில் முடங்கிக்கிடந்த இந்தப்படம் தற்போது திடீரென வேகம் எடுத்தது ஏன்? அண்மையில் தொடங்கப்பட்ட பைனான்சியர்கள் சங்கம் இனிமேல் கவுதம் மேனன் இயக்கும் படங்களுக்கு பைனான்ஸ் செய்ய மாட்டோம் என்று அறிவித்தனர். இதனால் அடுத்து விஷாலை வைத்து இயக்க உள்ள படத்தை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் தான் அவசரஅவசரமாக இந்தப்படத்தை முடித்துக் கொடுத்தாராம் கவுதம் மேனன்.

Previous Post

ஐரா மார்ச் ரிலீஸ் சாத்தியமா.?

Next Post

படப்பிடிப்புக்கு பஸ்ஸில் சென்ற விஜய் சேதுபதி

Next Post

படப்பிடிப்புக்கு பஸ்ஸில் சென்ற விஜய் சேதுபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures