Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பொன்னியின் செல்வனிலிருந்து விலகினார் விஜய் சேதுபதி?

February 17, 2019
in Cinema
0

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் செக்கச் சிவந்த வானம். இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம், பெரும் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் என்ற காவியப் படத்தை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணி ரத்னம் களம் இறங்கி இருக்கிறார்.

செக்கச் சிவந்த வானம் படத்தைப் போலவே, இந்தப் படத்திலும் பெரும் நடிகர்-நடிகையர் பட்டாளத்தை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், சிம்பு, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகி இருக்கிறார். ஏற்கனவே பல படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டோடு, பொன்னியின் செல்வன் பட கால்ஷீட் குறுக்கிடுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க விருப்பமாக இருந்தாலும், தேதி ஒத்து வராததோடு, படத்திற்காக ஆறு மாத காலம் ஒதுக்க வேண்டியிருப்பதால், அப்படத்தில் நடிக்க முடியாத சூழலில் தான் இருப்பதாக, பொன்னியின் செல்வன் படக் குழுவிடம், விஜய் சேதுபதி தெரிவித்து விட்டதாக செய்தி பரவி இருக்கிறது.

Previous Post

வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறிய மோகன்லால்

Next Post

விஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித்

Next Post

விஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures