Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு எதிர்ப்பு

February 16, 2019
in Cinema
0

சினிமாவில் பிரபலம் என்றாலே சில தனிப்பட்ட விஷயங்களுக்காகவும், அவர்களது குடும்ப விஷயங்களுக்காகவும் எதிர்மறையான விமர்சனங்கள் வருவது வழக்கம்தான். ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன்பு, நடிகரும், தொழிலதிபருமான விசாகனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தைப் பற்றி பலரும் பலவிதமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு டுவிட்டரில் சவுந்தர்யா, ஐஸ்லாந்தில் தேனிலவில் இருப்பதாக புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதற்கு அவருடைய கமெண்ட் பக்கத்தில் பலரும் எதிர்மறை கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

நாட்டில் தற்போது 40 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு பதிவைப் போடுவது சரியா என அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

“இது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதற்காக அதை புகைப்படம் எடுத்து இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதை டுவிட்டரில் வெளியிடுவது தேவையற்றது” என்று பலரும் பதிவிட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் இருவருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள்.

மூலக்கதை

Previous Post

90 எம்எல் – ஒரே ஒரு டிரைலர், ஓகோ வியாபாரம்

Next Post

எனை நோக்கி பாயும் தோட்டாவுக்கு யுஏ சான்று

Next Post

எனை நோக்கி பாயும் தோட்டாவுக்கு யுஏ சான்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures