Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

90 எம்எல் – ஒரே ஒரு டிரைலர், ஓகோ வியாபாரம்

February 16, 2019
in Cinema
0

பெண் இயக்குனரான அனிதா உதீப், அழகிய அசுரா என்ற பெயரில் இயக்கியுள்ள படம் ’90 எம்எல்’. சிம்பு இசையமைக்கும் இந்தப் படத்தில் ஓவியா, பொம்மு, மசூம், ஸ்ரீகோபிகா, மோனிஷா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படத்தின் டிரைலர் கடந்த வாரம் யு டியுபில் வெளியிடப்பட்டது.

ஆபாசக் காட்சிகள், வசனங்கள் கொண்ட அந்த டிரைலர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரைலருக்கு இதுவரையில் 70 லட்சத்திற்கும் கூடுதலான பார்வைகள் கிடைத்துள்ளன. டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக படத்தின் வியாபாரமும் முடிந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக இப்படிப்பட்ட படங்களின் வியாபாரங்கள் அமோகமாக நடந்து வருகின்றன. அது போலவே இந்தப் படத்தின் அனைத்து ஏரியாக்களின் விற்பனையும் முடிந்துவிட்டது என்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஆபாசத் தலைப்புகள், டிரைலர்கள் படங்கள் வருவது அதிகரித்துள்ள நிலையில், இந்தப் படத்திற்கு ’90 எம்எல்’ என குடிப்பதன் அளவீட்டுப் பெயரை படத் தலைப்பாக வைத்துள்ளதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இப்படிப்பட்ட தலைப்புகளை சென்சார் அமைப்பு நிராகரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

Previous Post

தன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா

Next Post

சவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு எதிர்ப்பு

Next Post

சவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures