Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

வர்மா பட மறுபடப்பிடிப்பு : புது நாயகி அறிவிப்பு

February 16, 2019
in Cinema
0

தெலுங்குத் திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் புதிய தமிழ் ரீமேக்கின் கதாநாயகியாக பனிதா சாந்து என்ற ஹிந்தித் திரைப்பட நடிகை அறிவிக்கப்பட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா வெளியிட்டுள்ளார்.

படத்தின் இயக்குனர் யார் என்று இன்னும் அறிவிக்காத நிலையில் படத்தின் கதாநாயகியை தயாரிப்பாளர் அறிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஒரு படத்திற்குப் பொருத்தமான நாயகன், நாயகி மற்ற நட்சத்திரங்களை அதன் இயக்குனர் தேர்வு செய்தால்தான் பொருத்தமாக இருக்கும்.

ஆனால், இந்த புதிய ரீமேக்கைப் பொறுத்தவரையில் படத்தின் நாயகன் துருவ்வின் அப்பா விக்ரம் தலையீடு அதிகம் இருப்பதாகத் திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அவரது எதிர்ப்பின் காரணமாகத்தான் முதலில் உருவான ரீமேக்கான ‘வர்மா’ படத்தை வெளியிடப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

பனிதா சாந்து விளம்பர மாடலாக இருந்து நடிகையானவர். கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ‘அக்டோபர்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர்.

விரைவில் இப்படத்தின் இயக்குனர் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர் கண்டிப்பாக தமிழ்ப் பட இயக்குனராக இருக்க வாய்ப்பில்லை என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள். பாலா இயக்கிய படத்தை தயாரிப்பாளர் வெளியிட மறுத்ததற்கு இயக்குனர்கள் பலரும் எதிர்ப்பாக இருக்கிறார்களாம்.

Previous Post

சிம்பு – த்ரிஷா மீண்டும் இணைகிறார்கள்?

Next Post

ரஜினி படத்தில் மீண்டும் நயன்தாரா

Next Post

ரஜினி படத்தில் மீண்டும் நயன்தாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures