மும்பையைச் சேர்ந்தவரான, நடிகை தேவயானி, தமிழ் பட இயக்குனர், ராஜகுமாரனை திருமணம் செய்து, தமிழச்சியாகி விட்டார். அதோடு, கணவரின் சொந்த ஊரான, ஈரோட்டில் உள்ள ஆலயங்கரடு என்ற கிராமத்தில், அவருடன் சேர்ந்து விவசாயமும் செய்து வருகிறார். மேலும், பண்ணை வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சிலர், ‘பிளாட்’ போட்டு விற்க தயாரானபோது, அந்த நிலங்களை வாங்கி, அதிலும், தற்போது விவசாயம் செய்து வருகிறார்.
அவரவர் அக்கறைக்கு, அவரவர் படுவார்!

