இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், சமூகம் சார்ந்த விசயங்களிலும் அக்கறை கொண்டவர். அதன்காரணமாக தமிழகத்தில் நடக்கும் சில மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டு தனது சமூக நோக்கத்தை வெளிப்படுத்தியவர்.
இந்நிலையில், ஊருக்குள் புகுந்து நாசம் செய்து வந்த காட்டு யானை சின்னதம்பியை கடந்த 25-ந்தேதி பொள்ளாச்சி அருகே உள்ள காட்டுப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் அது திரும்பவும் ஊருக்குள் வந்து விட, அந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து அதை விரட்டியதால் உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்த அந்த சின்னதம்பி யானை மயக்கம் போட்டு விழுந்தது.
இந்த நிலையில், மயக்கம் தெளிந்ததும் அதை காட் டுக்குள் விரட்ட அதிகாரிகள் தயாராக இருக்கும் நிலையில், அந்த யானையை கும்கியாக மாற்றலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், வாழும் உரிமை அந்த யானைக்கும் உள்ளது. தன் சகோதரனை பிரிந்த சோகத்தில் அலைந்து கொண்டிருக்கும் யானையை மேலும் துன்புறுத்துவது போன்று அதை கும்கியாக்குவோம் என்று அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது. இரண்டு யானைகளையும் மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

