நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை ராக்கெட்ரி என்கிற பெயரில் படமாக இயக்கி நடித்து வருகிறார் இந்தநிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் குறித்து பிரபல மலையாள இயக்குனர் சிபிமலயில் கூறும்போது தன் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர் நம்பி நாராயணன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இவர் மோகன்லால், மம்முட்டி ஆகியோரை வைத்து தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர்.
சிபி மலயில் 35 வருடங்களுக்கு முன்பு தனது முதல் படத்திற்காக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த நேரம்.. அப்போது அவரை அழைத்த நம்பி நாராயணன், தனது சகோதரர் சுப்பிரமணியம் என்பவர் படம் தயாரிக்க விரும்புவதாகவும் அதை சிபிமலயில் இயக்க வேண்டும் என விரும்புவதாகவும் கூறி அவரை சந்திக்க செய்தார்.
அந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்து, சிபி மலயிலுக்கு திரையுலக வாசலை அகலத் திறந்துவிட்டது. அதனால் நம்பி நாராயணனின் சுயசரிதையாக உருவாகும் இந்தப்படத்தை தான் ஆவலுடன் எதிர்பார்பதாகவும் கூறியுள்ளார் சிபி மலயில்.

