கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கும் படம் உயர்ந்த மனிதன். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இந்த படம் மூலம் முதன் முறையாக நேரடியாக தமிழில் அறிமுகமாகிறார். அவருடன் இன்னொரு ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மார்ச் 30-ந்தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்திற்காக 40 நாட்கள் ஒரே கால்சீட்டாக கொடுத்து நடிக்கிறார் அமிதாப்பச்சன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும், இதற்கு முன்பு எஸ்.ஜே.சூர்யா, இயக்கி நடித்த நியூ, அஆ படங்களைத் தொடர்ந்து இந்த படத்தில் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

