மலையாள திரையுலகில் இயக்குனர், பாடகர், நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வருபவர் இயக்குனர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பின் நீண்டகால நண்பராகிய இவர், திலீப்பின் வியாபார நிறுவனங்களிலும் பங்குதாரராக இருக்கிறார். கடந்த மூன்று வருடங்களில் ‘அமர் அக்பர் அந்தோணி’, ‘கட்டப்பனயிலே ரித்திக் ரோஷன்’ என இரண்டு ஹிட் படங்களை இயக்கியவர்
சமீபகாலமாக பிரபலங்கள் எல்லோரும் தங்களது 10 வருட சேலஞ்ச் என தங்களது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் நாதிர்ஷா திலீப்புடன் தனது 23 வருட நட்பை பறைசாற்றும் விதமாக தற்போதைய புகைப்படத்தையும், 23 வருடங்களுக்கு முன் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இருவரும் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி மேடைகளில் மிமிக்ரி செய்து கொண்டிருந்த காலத்தில் இருந்தே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

