சமீபத்தில் கங்கனா ரணவத் நடிப்பில் வெளியான மணிகர்ணிகா படம் மிகவும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜான்சிராணி கேரக்டரில் நடித்துள்ளார் கங்கனா. இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் மற்றும் கங்கனா இருவரும் இணைந்து இயக்கியதாகத்தான் சொல்லப்பட்டது.
குறிப்பாக வரலாற்றுப் படமாக உருவாகி இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் தான் 75 சதவீதத்திற்கும் மேல் உருவாக்கி கொடுத்ததாகவும், மீதி 25 சதவீத காட்சிகளை மட்டுமே கங்கனா ரணவத் எடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.. அப்போது அதை பெரிதுபடுத்தாத கங்கனா, படம் வெளியாகி வெற்றி பெற்றபின் இந்த படத்தில் முக்கால்வாசி காட்சிகளை தானே இயக்கியதாகவும் இயக்குனர் கிரிஷ் பெயரளவுக்கு உதவி மட்டுமே செய்ததாகவும் பிளேட்டை அப்படியே திருப்பிப் போட்டார். இதையடுத்து சோசியல் மீடியாவில் இவர்கள் இருவருக்குமான வார்த்தை யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது
இந்த நிலையில் இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழுவினர், இயக்குனர் க்ரிஷ்க்கு ஆதரவாக கிளம்பியுள்ளனர். குறிப்பாக ஜிம்மி ஜிப் கேமரா பிரிவை சேர்ந்த விக்கி என்பவர் இந்த படத்தில் 75 சதவீத காட்சிகளை இயக்குனர் கிரிஷ் தான் படமாக்கினார் என்று கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் கிரிஷ் இந்த படத்தில் இருந்து விலகியதும் தன்னைப்போன்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் அவருடன் விலகிச் செல்ல முடிவெடுத்தனாராம். ஆனால் தங்களை சமாதானப்படுத்தி தொடர்ந்து அந்த படத்தில் தொடர்ந்து பணிபுரிந்து, கங்கனாவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் என கிரிஷின் பெருந்தன்மையை புகழ்ந்து கூறியுள்ளார்.

