Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட்

January 22, 2019
in Cinema
0

இயக்குனர் சுந்தர்.சி. இயக்கத்தில் முதன் முதாலாக, சிம்பு நடித்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா, மேகா ஆகாஷ் இருவரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன், மஹத், நாசர், பிரபு, ரோபோ சங்கர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுமன் வி.டி.வி.கணேஷ் என்று நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

பொங்கலுக்கு ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய பெரிய படங்கள் வெளியானதால் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இன்னொரு பக்கம் சம்பள பிரச்சனை காரணமாக பாடல் காட்சியில் நடிக்க வராமல் முரண்டு பிடித்தார் சிம்பு. இதன் காரணமாக படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியாகும் என்று இப்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘சர்வம் தாளமயம்’. மம்முட்டியின் ‘பேரன்பு’ ஆகிய படங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீஸ் தேதி குறித்துள்ளன.

இந்நிலையில் இப்போது சிம்பு நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம், பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீஸ் என்று வெளியான தகவல் ஜி.வி.பிரகாஷை அப்செட்டாக்கி உள்ளதாம். ஏற்கனவே பல தடவை சர்வம் தாள மயம் படத்தின் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டு பிறகு தள்ளி வைக்கப்பட்டநிலையில், இப்போது மற்ற படங்களினால் மீண்டும் இடையூறு ஏற்பட்டிருப்பதால் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்..

Previous Post

தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் பர்ஹின். தமிழில் பிந்தியா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகி, கமல்ஹாசன் ஜோடியாக கலைஞன் படத்தில் நடித்தார். அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்ற அவர், அங்கு ஜான் தேரே நாம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் பர்ஹின் டில்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர், நேற்று தனது காரில் டில்லி செலக்ட் சிட்டி மாலுக்கு ஷாப்பிங் செய்ய சென்று கொண்டிருந்தார். கார் சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த சில வாலிபர்கள். அவரிடம் நீங்கள் காரை சரியாக ஓட்டவில்லை என்று தகராறு செய்துள்ளனர். அப்போது திடீரென அவர்கள் பர்ஹின் அணிந்திருந்த சங்கிலி, கை பையை பறித்துக் கொண்டு ஓடினார். பர்ஹின் காரை விட்டு இறங்கி அவர்களை துரத்தி உள்ளார். அவரை அந்த கொள்ளையர்கள் நடுரோட்டில் அடித்து தள்ளி விட்டு ஓடிவிட்டனர். இதனால் பர்ஹின் ரோட்டிலேயே மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தனியாக செல்லும் பணக்கார பெண்களை தாக்கி கொள்ளை அடிக்கும் தக் தக் என்ற கும்பல்தான் இதனை செய்துள்ளது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Post

ஜன., 26 முதல் அசுரன் தொடக்கம்

Next Post

ஜன., 26 முதல் அசுரன் தொடக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures