சுமார் 10 படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவற்றில் 7 படங்கள் இந்த ஆண்டு வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
மணிரத்னத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். திரைக்கதை எழுதி தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார் மணிரத்னம்.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஆனால், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடி இல்லை. இருவரும் சகோதரன் – சகோதரியாக நடிக்கின்றனர். 2018-ம் ஆண்டின் இறுதியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த கனா படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த வெற்றிப் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில் ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக மணிரத்னம் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

