ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் இந்தியன்-2. இந்த படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சிம்பு, துல்கர்சல்மான் என பல நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் பணிகள் கடந்த சில மாதங்களாக பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் பொங்கல் முடிந்ததும் ஜனவரி 18-ந்தேதி இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்குகிறது.