கபாலி, காலா படங்கள் வெளியான நேரத்தில் ரஜினி ரசிகர்களிடம் டுவிட்டரில் மல்லுக்கட்டி வந்தவர் நடிகை கஸ்தூரி. அதன்பிறகு சர்கார் படம் வெளியானபோது விஜய் ரசிகர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்து அவர்களின் கண்டனத்திற்கு ஆளானார்.
அதையடுத்து தற்போது அஜீத் ரசிகர்களிடமும் மோதலில் ஈடுபட்டு வரும் கஸ்தூரி, ஒரு பேட்டியில், சர்கார் சர்ச்சை குறித்து ஒரு கருத்து கூறியிருக்கிறார். அதாவது, விஜய் ரசிகர்களும் ரஜினி, அஜீத் ரசிகர்களைப்போன்று உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்தான். அதைதான் சர்கார் படத்திற்கான எதிர்ப்பு எழுந்தபோது அவர்கள் வெளியிட்டார்கள்.
ஆனபோதும், சர்கார் சர்ச்சையின்போது விஜய் அமைதியாக இருந்தார். அதைப்பார்த்து அவர் பயந்து விட்டதாக சிலர் சொன்னார்கள். ஆனால் பயப்படுவதற்கும், விட்டுக்கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. விட்டுக்கொடுப்பது பெரிய மனுஷத்தன்மை என்று சொல்லி விஜய்யை பெருமைப்படுத்தியிருக்கிறார் கஸ்தூரி.