சென்னையில் நடந்த பொங்கல் விழா ஒன்றில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டார். பொங்கல் நிகழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்த சரத்குமார், பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
அரசியலைப் பொறுத்த வரை, விரைவில் வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் நான் போட்டியிட விரும்புகிறேன். என் கட்சியின் உயர் மட்டக் குழு கூடி என்னை போட்டியிட கேட்டுக் கொண்டால், நான் போட்டியிடுவேன்.
நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் என்னுடன் இருக்கும் சக நடிகர்கள் மட்டுமே. திரையுலகில் எனக்கென சில நண்பர்கள் இருக்கின்றனர். பார்லிமெண்ட் தேர்தலில் ரஜினி, கமல் ஆகியோரின் கட்சிகள் போட்டியிட களத்துக்கு வந்தாலும், என் கட்சி அவர்களோடு கூட்டணி அமைத்துக் கொள்ளாது. வரும் பார்லிமெண்ட் தேர்தலைப் பொறுத்த வரை, நடிகர் விஜயகாந்த் விரும்பினால், அவர் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.