அண்மையில் இளையராஜா மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே, அவரது பிறந்த நாள் விழாவையும் கேக் வெட்டிக் கொண்டாடினார். மாணவிகள் மத்தியில் பேசியும், பாடி உற்சாகப்படுத்தினார்.
கல்லூரிகளில் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன், அவரது இசையில் பாடவும் விரும்புவதாகவும், தங்கள் கனவென்றும் இளையராஜாவிடம் கூறினர். இதையடுத்து இரண்டு கல்லூரியிலும் பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்து குரல் தேர்வு நடத்தி இருக்கிறார்.
அவர்களில் 9 மாணவிகளைத் தேர்வு செய்தவர், அடுத்தடுத்து தான் இசையமைக்கும் படங்களில் பாடகியாக அறிமுகம் செய்ய உள்ளார். இதன் மூலம் தங்களின் கனவு நினைவான பூரிப்பில் உள்ளனர் அந்த 9 மாணவிகளும்.