Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஒரு பக்க கதை – தியேட்டருக்கு வராது ?

December 14, 2018
in Cinema
0

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து, 2012ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் இரண்டாவது படமாக ஆரம்பமான படம் ‘ஒரு பக்கக் கதை’. 2014ம் ஆண்டு கமல்ஹாசன் துவக்கி வைத்த படம் இது. மலையாளம், மற்றும் தமிழில் பல படங்களில் நடித்த ஜெயராம் மகன் காளிதாஸ் இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்த முதல் படமும் இதுதான்.

படம் முடிந்து பல மாதங்களாகியும் பல்வேறு பிரச்சினைகளால் படம் வெளியாவது தள்ளிப் போனது. சில வாரங்களுக்கு முன்புதான் இப்படத்தின் சென்சார் முடிவடைந்தது. தியேட்டரில் விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜீ 5 என்ற ஆன்லைன் ஆப்பில் இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தியேட்டரில் படத்தை வெளியிடாமல் நேரடியாக ஆப்பில் வெளியிட அதிகத் தொகை கொடுத்து படத்தை வாங்கியுள்ளளார்களாம். இப்படத்துடன் ‘பரியேறும் பெருமாள்’ பட நாயகன் கதிர் நாயகனாக நடித்து சில திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வரவேற்பைப் பெற்ற ‘சிகை’ படமும் தியேட்டர்களில் வெளியாகாமல் ஜீ 5 ஆப்பில் வெளியாக உள்ளதாம்.

இது தமிழ் சினிமாவிற்கு நல்லதா, இல்லை தியேட்டர்களுக்கு சிக்கலா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

Previous Post

சிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி

Next Post

மகிந்த பதவி விலகினால் அமைச்சர்களின்நிலை என்ன ?

Next Post

மகிந்த பதவி விலகினால் அமைச்சர்களின்நிலை என்ன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures