விலங்குகள் நல அமைப்பான பீட்டா பல வகையிலும் விலங்குகளை பாதுகாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. இதில் பல பிரபலங்கள் அங்கம் வகித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நடிகை சன்னிலி யோனும் பீட்டா அமைப்பில் இணைந்து இருப்பதோடு, விலங்குகளை பாதுகாக்க குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், பீட்டா அமைப்பில் சிறந்து செயல்பட்டவர்களுக்கான 2018ம் ஆண்டிற்கான விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. நடிகை சன்னி லியோனுக்கு டிஜிட்டல் ஆக்டிவிசம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சன்னிலியோன் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், எனது முயற்சிகளை அங்கீகரித்ததற்காக பீட்டாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விலங்குகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான எனது போராட்டம் முடிவடையாது. தொடர்ந்து விலங்குகளிடம் மக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற விழிப்புணர்வுகளை செய்து விலங்குகளை பாதுகாப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

