‘எந்தவித சத்தமும், பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தால், சினிமா உலகம், ஆளையே மறந்து விடும்’ என்ற ரகசியத்தை, அமலா பால், நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்.
இதனால் தான், அவ்வப்போது, ஏதாவது பரபரப்பு தீயை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை, விவாகரத்தில் முடிவடைந்ததை அடுத்து, சினிமாவில் இனி நடிக்க
மாட்டார் என்று தான், அனைவரும் நினைத்தனர்.
ஆனால், முன்பை விட அதிகமான படங்களில் நடித்து, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ‘மீ டூ’ விவகாரத்திலும், அமலா பால், தானாக முன்வந்து தெரிவித்த கருத்து, அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வளவுக்கும் மத்தியில், ஆடை, அதோ அந்த பறவை போல் ஆகிய தமிழ் படங்களிலும், ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்திலும் சத்தமில்லாமல் நடித்து வருகிறார். அமலா பாலின் இந்த தந்திரம், சக நடிகையரை ஆச்சரியப்பட வைக்கிறது.

