2.0 படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி உடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என பெரும் நடசத்திரப் பட்டாளம் நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் மூன்று போஸ்டர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.
நேற்று படத்தின் மரண மாஸ் பாடல் வெளியாகி ரசிகரகளை ஆட்டம் போட வைத்திருக்கிறது. பேட்ட படத்தின் டீஸரை விரைவில் வெளியிட உள்ளனர். இந்நிலையில் பேட்ட படத்தில் நடிக்கும் கேரக்டர்களின் பெயர்களை போஸ்டர் மூலமாக படக்குழு இன்று முதல் வெளியிடுகிறது.
அதன்படி முதலாவதாக விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதில் அவர், ஜித்து என்ற பெயரில் நடிக்கிறார். இந்த போஸ்டரில் உடலில் போர்வை போர்த்தியபடி கையில் துப்பாக்கி ஏந்தி கோபமாக இருக்கிறார் விஜய் சேதுபதி. பின்னணியில் ரஜினி நடந்து வருவது போன்று உள்ளது. இதன்மூலம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

