செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். சுந்தர் சி இயக்க, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரஸா, ரோபோ சங்கர், பிரபு, நாசர், ரம்யா கிருஷ்ணன் மகத், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த அத்திரண்டிகி தாரேதி, படத்தின் தமிழ் ரீ-மேக் இது. ஜார்ஜியாவில் பெரும்பாலான காட்சிகள் படமான நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 2.09 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில், “என்னை நம்பி கெட்டவங்க யாருமில்ல, நம்பாக கெட்டவங்க நிறைய பேர் இருக்காங்க…” என்கிற வசனத்துடன் ஆரம்பிக்கிறது. டீசர் முழுக்க பெரிய இடத்து பையனாக, குறும்புக்கார பிளேபாயாக வருகிறார் சிம்பு.
இந்த டீசர் சிம்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெளியான 4 மணிநேரத்தில் 6 லட்சம் பார்வைகளும், 72 ஆயிரம் லைக்குகளும் யூ-டியூப்பில் கிடைத்துள்ளன.