கஜா புயலுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் எல்லாம் உதவி செய்து கொண்டிருக்க, நடிகர் அஜித் மட்டும் கோவாவுக்கு சென்று விட்டார். அவர், இப்படி ஒதுங்கி இருப்பது ஏன் என்று புரியவில்லை என, சிலர் அங்கலாய்த்தனர்.
ஆனால், அஜித், தன்னுடைய உதவியாளரை அழைத்து, ரூபாய் பதினைந்து லட்ச ரூபாய்க்கு, செக் போட்டுக் கொடுத்து, அதை, முதல்வர் நிவாரண நிதிக்கு சேர்க்குமாறு கூறினார். அதையடுத்து, முதல்வர் நிவாரண நிதிக்கு, அஜித்தின் செக் கொண்டு சேர்க்கப்பட்டது.
அப்போது, இந்த செக்கை, நீங்களே நேரடியாக, முதல்வரை சந்தித்து கொடுத்து விடலாம். அதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என, அஜித்தின் நண்பர்கள் சிலர் கூறியுள்ளனர்.
அதை மறுத்த அஜித், இந்த விஷயத்திலெல்லாம் விளம்பரம் தேடிக் கொள்ளக் கூடாது. யாருக்கு உதவி சென்று சேர வேண்டுமோ, அது சரியான நேரத்தில் போய்ச் சேர வேண்டும் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.