டெம்பர் படத்தின் ஹிந்தி ரீமேக்கான சிம்பாவில் நாயகனாக நடித்துள்ளார் ரன்வீர் சிங். ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக சாரா அலிகான் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 28-ந்தேதி திரைக்கு வருகிறது.
கடந்த நவம்பர் 14-15 தேதிகளில் தனது காதலி தீபிகா படுகோனேவை இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார் ரன்வீர் சிங். அதையடுத்து நவம்பர் 21-ந்தேதி பெங்களூருவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே சிம்பா படத்தில் நடித்து முடித்து விட்ட ரன்வீர்சிங், தற்போது அப்படத்திற்கான டப்பிங் வேலைகளை மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் தொடங்கியிருக்கிறார். சிம்பா டிரைலர் டிச.3ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.