கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு விஜய்சேதுபதி நடித்த ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, அதர்வாவை வைத்து ஆர்.கண்ணன் இயக்கியுள்ள ‘பூமராங்’, ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் ‘ஜெயம்’ ரவியின் ‘அடங்க மறு’ படத்தை அதே தேதியில் வெளியிட்டுக்கொள்ளவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அனுமதி வழங்கினர். இந்தப்படமும் டிசம்பர் 21-ஆம் தேதி வெளியானால் கிறிஸ்துமஸை முன்னிட்டு 5 படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டது.
5 படங்களும் ஒரே நாளில் ரிலீசானால் இந்தப்படங்களுக்கு தேவையான தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம். ஒரு படத்துக்கு 200 தியேட்டர் கூட கிடைக்காது. இந்த விஷயத்தை கருத்தில் கொண்ட ராஜீவ்மேனன் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ரிலீசை ஒரு வாரம் தள்ளி வைத்திருக்கிறார்.
அதாவது ‘சர்வம் தாளமயம்’ படம் டிசம்பர் 28—ஆம் தேதி ரிலீஸ் என்ற தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ராஜீவ் மேனன் இயக்கியுள்ள இந்த படம் மியூசிகல் சப்ஜெக்ட். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

