தன்னுடைய படநிறுவனத்தின் தயாரிப்பில் ‘நான்’, ‘சலீம்’, ‘இந்தியா – பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, ‘எமன்’, ‘அண்ணாதுரை’, ‘காளி’ சமீபத்தில் வெளியான ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
இவற்றில் ‘நான்’, ‘சலீம்’ ஆகிய இரண்டு படங்களும் ஓரளவு பேசப்பட்டன. ‘பிச்சைக்காரன்’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் வணிகரீதியில் வெற்றியடைந்தது.
ஆனால், விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ‘இந்தியா – பாகிஸ்தான்’,’சைத்தான்’, ‘எமன்’, ‘அண்ணாதுரை’, ‘காளி’ போன்ற படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் விஜய் ஆண்டனி முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்தார். அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. ஆனாலும் மற்றொரு படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.
இப்போது ‘கொலைகாரன்’, மற்றும் நவீன் இயக்கத்தில் ‘அக்னி சிறகுகள்’ படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி இந்த இரண்டு படங்கள் தவிர ‘காக்கி’ என்ற மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். ‘திமிரு புடிச்சவன்’ படத்தை தொடர்ந்து ‘காக்கி’யிலும் போலீஸ் வேடம் ஏற்கிறார் விஜய் ஆண்டனி.

