ஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த படம் இந்தியன். கமலுடன் மனீஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமனி, செந்தில் என பலர் நடித்திருந்த அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
தற்போது, இந்தியன் படத்தின் இரண்டாம் பாக வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கமலுடன் நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோர் இணைந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகரும், தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி படங்களில் நடித்த துல்கர் சல்மானும் இந்தியன் 2-வில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
