தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.
இப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று உலகளாவிய ரீதியில் பிரமாண்டமாக வௌியிடப்படவுள்ளது.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சர்காரை கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றன நிலையில் , கேரளா விஜய் ரசிகர்கள் இந்தியாவையே மிரள வைத்துள்ளனர்.
படத்தை வரவேற்கும் முகமாக அவர்கள் 175 அடி உயிரத்திற்கு கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.
இது நடிகரொருவருக்கு வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கட் அவுட் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , மலையாள நடிகர் சன்னி வைன் இந்த கட் அவுட்டை திறந்து வைத்து ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கேரளாவில் மலையாள நடிகர்களுக்கு இணையான வரவேற்பு விஜய்க்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
