தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு கார்த்தி-ரகுல் பிரீத் சிங் இணைந்துள்ள படம் தேவ். ரஜத் ரவி சங்கர் இயக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு பாடல் பாடியிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தது.
மேலும், உக்ரைன், லண்டன், புதுடெல்லி, புனே உள்பட பல பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தேவ் படத்தின் டீசர் நவம்பர் 5-ந்தேதியான நாளை வெளியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

